உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரை நட்சத்திரம் தீபிகா படுகோன் இன்று (ஜனவரி 5) தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களைக் குவித்து வரும் வேளையில், அவரது பிரம்மாண்ட சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 3 நடிகைகளில் ஒருவராகத் திகழும் தீபிகா, ஒரு படத்திற்கு ரூ. 15 கோடி முதல் ரூ. 30 கோடி வரை ஊதியமாகப் பெறுகிறார்.
படங்கள் மட்டுமின்றி, விளம்பரத் தூதுவராகச் செயல்படுதல் மற்றும் அவரது சொந்த அழகு சாதன பிராண்டான ’82°E’ மூலம் பெருமளவு வருமானம் ஈட்டி வருகிறார்.
மும்பை, பாந்த்ரா பகுதியில் ஷாருக்கானின் ‘மன்னத்’ இல்லத்திற்கு அருகிலேயே தீபிகா – ரன்வீர் சிங் தம்பதியினருக்குச் சொந்தமான சொகுசு பங்களா உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ. 119 கோடி எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாலிவுட் வட்டாரத் தகவல்களின்படி, தீபிகா படுகோனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 500 கோடி ஆகும். இதன் மூலம் இந்திய சினிமாவில் வசதி படைத்த டாப் 10 நடிகைகளின் பட்டியலில் அவர் இடம்பிடித்துள்ளார்.
தற்போது தீபிகா படுகோன் தனது கணவர் ரன்வீர் சிங் மற்றும் மகள் துவா (Dua) ஆகியோருடன் நியூயார்க்கில் (New York) தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். முன்னதாக மும்பையில் தனது ரசிகர்களுடன் இணைந்து ‘A Day of Gratitude’ எனும் தலைப்பில் அவர் கேக் வெட்டிப் பிறந்தநாளைக் கொண்டாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.