green chilli chutney recipe
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

காரசாரமான பச்சை மிளகாய் சட்னி! எப்படி தயாரிப்பது?

Share

பொதுவாக நாம் அடிக்கடி உணவில் சேர்க்கும் பச்சை மிளகாயில் ஆன்டி ஆக்ஸைடுகள், நார்ச்சத்து, விட்டமின் சி, கே, ஈ, இரும்பு சத்து போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன.

பச்சை மிளகாய் உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லது. அந்தவகையில் பச்சை மிளகாயை வைத்து எப்படி காரசாராமான சட்னி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

green chilli chutney recipe
தேவையான பொருட்கள்

  • பச்சை மிளகாய் – 20
  • சின்ன வெங்காயம் – 50 கிராம்
  • உளுந்து – 2 டீஸ்பூன்
  • பூண்டு – 10
  • புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
  • சமையல் எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • தாளிக்க :
  • கடுகு, கறிவேப்பிலை

செய்முறை

  • சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை நன்றாக கழுவி வைக்கவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
  • பின் சின்ன வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
  • அடுத்து அதில் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கியபின் இறக்குவதற்கு முன் புளி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
  • அனைத்தையும் ஆற வைத்து மிக்சியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.
  • மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த சட்னியில் கொட்டவும். சூப்பரான காரசாரமான பச்சை மிளகாய் சட்னி தயார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...