‘சப்ரைஸுக்கு தயாராகுங்கள்’ – சிம்பு ருவிற்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு.

தற்போது பல படங்களை கைவசம் கொண்டுள்ள சிம்பு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது இவர் கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, நதிகளிலே நீராடும் சூரியன் ஆகிய படங்கள் உள்ளன.

இவற்றில் வெங்கட் பிரபுவின் மாநாடு படம் எதிர்வரும் நவம்பர் மாதம்  தீபாவளியன்று வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் அக்டிவாக இருக்கும் சிம்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸி அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது ருவிற்றர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் சர்ப்ரைஸுக்கு தயாராகுங்கள் எனவும் கப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிம்பு ஆல்பம் பாடல் ஒன்றை பாடி உள்ளார் எனவும், அந்த ஆல்பம் பாடல் விரைவில் வெளியாக உள்ளதைத் தான் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

‘சர்ப்ரைஸுக்கு தயாராவோம்………’

simpu

Exit mobile version