பிக்பாஸில் மலரும் புதிய காதல்!!

இதுவரை பிக்பாஸ் சீசன் ஒரு அழகிய காதல் கதை இல்லாமல் கடந்தது இல்லை. ஆனால் சீசன் 5 இல்  அக்சரா நீரூப் , அருண் அக்சரா போன்ற எதாவது ஜோடிகள் உருவாகும் என பல எதிர்பார்ப்புக்கள் இருந்தாலும் அது வெறும் எதிர்பார்ப்பாகவே போய்விட்டது.

Abhisjek Raja Pavni Reddy

ஆனால் இன்று (07) விஜய் டீவியில் வெளியிடப்பட்ட ப்ரோமோவில் ஒரு காதல் கதைக்கு பிக்பாஸ் வீடு  தயாராகுவது போல தெரிகிறது.

இடையில் வீட்டிற்குள் வந்த அமீர்- பாவ்னி இதுவரை ஒரு அழகிய நட்பில் இருந்திருந்தாலும்,  ப்ரோமோவில் அமீரின் க்ரஸ் பாவ்னி என்றும்,  “என்னவளே என்னவளே ” பாடலை ஒளிபரப்பாக்கி  ஒரு பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் மலருமா? பார்வையாளர்களுக்கு சுவாரஷ்யத்தை மீட்டு கொடுக்குமா என வருகிற வாரங்களில் தெரிய வரும்.

Exit mobile version