images 2 1 6
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

ஐப்ரோ த்ரெட்டிங் ரிப்ஸ்!

Share

கண்புருவங்களை சீர் செய்யும்போது அதிலுள்ள சில முடிகளை நீக்குவதால் தாங்க முடியாத வலி இருக்கலாம். ஐப்ரோ திரட்டிங்கின்போது வேர்க்காலுடன் சேர்த்து முடிகளை அகற்றுவதால் இந்த வலி ஏற்படுகிறது. இந்த வலியைத் தவிர்க்க முடியாவிட்டாலும் குறைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் உள்ளன.

புருவங்களைத் திருத்த வேண்டுமென்று நினைத்தால் 2-3 வாரங்களுக்கு முன்பே நீங்கள் தயார் ஆக வேண்டும். புருவத்தில் நன்றாக முடி வளர்வதற்கு இந்த காலகட்டத்தை தாருங்கள். புருவம் நன்றாக வளர்ந்தபின்னர் திரெட்டிங் செய்யும்போது அதை அழகாக வில்போன்று வளைத்து மார்க் செய்து சிறப்பாக திரெட்டிங் செய்ய உதவும்.

அதேபோல் திரெட்டிங் செய்வதற்கு முன்பாக உங்கள் முகத்தை நன்றாகக் கழுவி விடவேண்டும். மேக்கப் போட்டிருந்தாலோ, சன்ஸ்கிரீன் பூசியிருந்தாலோ, அல்லது வேறு எண்ணெய்களை தடவியிருந்தாலோ முற்றிலும் நீக்கி விடுங்கள். ஏனென்றால் திரெட்டிங் அல்லது வேக்ஸிங் செய்யும்போது புருவத்தில் ஏற்படும் புதிய துளைகளுக்குள் சென்று வேறு விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடாது.

புருவத்தைத் திருத்திய பிறகு அந்தப் பகுதியின் மீது ஹெசல் அல்லது அக்னே ஆஸ்ட்ரின்ஜென்ட் கிரீமை தடவ வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். ஐப்ரோ திருத்துவதற்கு முன்பாக புருவப் பகுதியை மரத்துப்போகச் செய்யலாம். அதற்கென விற்கும் கிரீம்களை வாங்கித் தடவினால் புருவப் பகுதியில் உணர்வற்றுப் போகும்.

அப்படிப்பட்ட கிரீம்களை திரெட்டிங் செய்வதற்கு அரை மணிநேரத்துக்கு முன்பாக தடவிவிட வேண்டும். திரெட்டிங்கினால் ஏற்படும் வலி சிறிதுநேரத்துக்கு அசௌகரியமாக இருந்தாலும் சிலருக்கு சென்சிடிவ் ஸ்கின் இருப்பதால் அவர்களால் வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் போகலாம். திரெட்டிங் செய்த 5 நிமிடங்கள் அல்லது கால் மணிநேரத்துக்கு புருவப் பகுதிகள் சிவந்திருப்பது சகஜம்.

#Beauty

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...