பிரபல பின்னணி பாடகர் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமாகி இன்றுடன் (செப்டெம்பர் 25) ஓராண்டு பூர்த்தியாகிறது.
தனது வசியக் குரலால் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் காலாதிகாலம் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் எஸ்.பி.பி. அவரது ஒவ்வொரு பாடல்களும் அனைவராலும் ரசிக்கப்பட்டவை. ரசிக்கப்பட்டு வருபவை.
கடந்த ஆண்டு கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பெற்று குணமடைந்த
எஸ்.பி.பி. தொற்றிலிருந்து குணமடைந்த ஒரு சில நாள்களில் இவ்வுலகை விட்டுச் சென்றார்.
அவர் உயிரிழந்து இன்றுடன் ஒரு ஆண்டு முடிவடைகிறது. இந்த நிலையில் அவரது நினைவு நாளை முன்னிட்டு பிரபலங்கள் தொடக்கம் ரசிகர்கள் வரை அனைவரும் அவருக்கு சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
எஸ்.பி.பி. இந்த உலகை விட்டுச் சென்றாலும் அவரது பாடல்கள் மூலம் அனைவரது மனதிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
இந்த நிலையில், எஸ்.பி.பி.யின் இறுதிப் பாடலான ‘அண்ணாத்த’ படத்தில் இடம்பெற்ற பாடல் இன்று வெளியாக வாய்ப்புக்கள் உள்ளன என எதிர்பாக்கப்படுகிறது.
“இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்” ‘
எஸ்.பி.பி. வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இனியும் சந்ததி சந்ததியாக வாழத்தான் போகிறார். இசையாக மட்டுமல்ல ஒரு நல்ல மனிதனாகவும் கூட.
Leave a comment