Rashmika Mandanna
சினிமாபொழுதுபோக்கு

என் பொறுமையை சோதிக்காதீங்க! – வைரலாக வாரிசு நாயகியின் பதிவு

Share

இனியும் என் பொறுமையை சோதிக்காதீங்க என நடிகை ராஷ்மிகா மந்தனா மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடித்து வரும் ’வாரி’சு திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடிகர் விஜய்தேவரகொண்டாவை காதலிப்பதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் வதந்திகள் எழுந்து வருகின்றன.

இது குறித்து ஏற்கனவே பலமுறை அவர் விளக்கம் அளித்த போதிலும் தொடர்ந்து இந்த வதந்தி பரவி வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த சில நாட்களாக, இல்லை வாரங்களாக, இல்லை மாதங்களாக இல்லை, பல ஆண்டுகளாக என்னை தொந்தரவு செய்யும் விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதால் நான் பேச வேண்டிய நேரம் இது தான் என்று நினைக்கிறேன். இதை நான் பல வருடங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்,. இப்போது தாமதமாக நான் இதை சொல்கிறேன்.

நான் என் சினிமா பயணத்தை தொடங்கியதில் இருந்தே நிறைய எதிர்ப்புகளை சந்தித்து வருகிறேன். நான் தேர்ந்தெடுத்துள்ள வாழ்க்கை மிகவும் சிக்கலானது என்று எனக்கு தெரியும். என்னை எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என் நடிப்பு உங்களுக்கு பிடிக்காமல் இருந்தால் என்னுடைய நடிப்பை நீங்கள் தாராளமாக விமர்சனம் செய்யலாம். என் நடிப்பின் மூலம் உங்களை மகிழ்ச்சிப்படுத்த விரும்பும் நான் உங்கள் விமர்சனத்தின் மீது அக்கறை காட்டுகிறேன். என்னால் முடிந்தவரை பெருமை கூட விஷயங்களை செய்ய முயற்சி செய்கிறேன்.

ஆனால் நான் சொல்லாத, செய்யாத ஒரு விஷயத்தை வைத்து நான் கேலி செய்யப்படும் போது படும்போது தான் மனம் உடைந்து விடுகிறேன். நான் சில பேட்டிகளில் பேசிய விஷயங்கள் எனக்கு எதிராக மாறி தவறாக வதந்திகள் பரவி வருகிறது. இது எனது சினிமா வாழ்க்கையை மட்டுமல்ல எனது தனிப்பட்ட உறவுகளையும் பாதிக்கும்.

ஒரு நல்ல விமர்சனம் ஒருவரை மேம்படுத்தும் என்பது எனக்கு தெரியும். ஆனால் சில விமர்சனங்கள் வேண்டுமென்றே வெறுப்புடன் மோசமாகவும் வருகிறது. இனியும் என்னுடைய பொறுமையை சோதிக்க வேண்டாம். உங்களின் அன்பும் ஆதரவும் வேண்டும் என்று நான் தைரியமாக சொல்லும் நிலையில் என்னை மோசமாக விமர்சிக்க வேண்டாம் என்றும் கேட்டு கொள்கிறேன்.

உங்களுக்காக நான் கண்டிப்பாக கடினமாக உழைப்பேன். உங்களை மகிழ்விப்பது தான் எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயம். எனவே அனைவரிடமும் அன்பாக இருங்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அடுத்து அவருக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 38
சினிமாபொழுதுபோக்கு

த.வெ.க கொடி நிறத்தில் திரிஷாவின் உடை: ரசிகர்கள் விவாதம்!

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, நடிகர் விஜய் தீவிரமாகச் செயல்பட்டு வரும்...

Untitled 36
சினிமாபொழுதுபோக்கு

சமூக வலைதளங்களில் பேசுபொருளாகும் விஜய் – திரிஷா விவகாரம்: வைரலாகும் புதிய தகவல்கள்!

நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி...

05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...