don1
பொழுதுபோக்குசினிமா

‘டான்’ பர்ஸ்ட் லுக் – வைரலாக்கும் ரசிகர்கள்

Share

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

’டான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என சிவகார்த்திகேயன் தனது ருவிட்டர் பக்கத்தில் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் படத்தின் பர்ஸ்ட் லுக்போஸ்டரை எதிர்பாத்து காத்திருந்தனர்.

தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், போஸ்டர் அவரின் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

போஸ்டர் சிவகார்த்திகேயன், சிவாங்கி, வி.ஜே விஜய், பாலசரவணன், காளி வெங்கட் ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கி வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இது இன்னும் அதிகரிக்கச்செய்துள்ளது.

shiva 1

’டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்த நிலையில், தனது டப்பிங் பணியையும் முடித்து விட்டதாக சிவகார்த்திகேயன் ஏற்கனவே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

சிவகார்த்திகேயன் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், எஸ்.ஜே. சூர்யா, வி.ஜே. விஜய், சமுத்திரக்கனி, சூரி, பாலசரவணன் காளி வெங்கட், ஷிவாங்கி உள்பட பலர் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியாகிய ‘டாக்டர்’ திரைப்படம் தற்போது மிகப்பெரும் வெற்றியடைந்துள்ள நிலையில், ‘டான்’ திரைப்படத்தின் தரிசனத்துக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...