‘கோல மாவு கோகிலா’ படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள படம் ‘டாக்டர்’.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத் திரைப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்ரூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் தயாரித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைவடைந்துள்ளதால் எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி தியேட்டர்களில் படத்தை வெளியிட முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது படக்குழு.
தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தையும் இயக்குநர் நெல்சனே இயக்கியுள்ளார். இந்த நிலையில் டாக்டர் படத்துக்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமல்லாது தளபதி ரசிகர்களும் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
Leave a comment