இந்தியன் 2 படத்திற்காக இயக்குனர் ஷங்கர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

24 6694eaace7a12

இந்தியன் 2 படத்திற்காக இயக்குனர் ஷங்கர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

1996ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் 2ம் பாகமாக இந்தியன் 2 அதே இயக்குனர் ஷங்கர் மற்றும் நாயகன் கமலுடன் உருவாக்கப்பட்டு வந்தது.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த 2ம் பாகம் இடைவேளை விடப்பட்டு உருவாகி வந்தது. ஒருவழியாக கடந்த ஜுலை 12ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.

கமலை தாண்டி எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முதல் நாளில் இருந்த நல்ல வரவேற்பை பெற்றுவரும் படம் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது.

நாம் தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரத்தை காண்கிறோம். தற்போது இப்படத்தை செதுக்கிய அதாவது இயக்கிய ஷங்கரின் சம்பளம் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

அதாவது இந்தியன் 2 படத்திற்காக இயக்குனர் ஷங்கர் ரூ. 50 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளாராம்.

Exit mobile version