தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு. அவர் தற்போது கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ’நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக வடிவேலு லண்டன் சென்று இந்திய திரும்பியுள்ள நிலையில், அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு தரிசனத்துக்காக காத்திருக்கும் ரசிகர்கள் வடிவேலு குணமடைய பிரார்த்தித்து வருகின்றனர்.
#Cinema
Leave a comment