Mushrrom Fried Rice 2 3ggggg
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

10 நிமிடத்தில் காளான் சாதம்

Share

காளான்களின் குறைந்த அளவில் குறைந்த தாவர புரதங்களால் நிரம்பியுள்ளதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உதவுகின்றது.

அத்துடன் காளான்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், போதுமான காளான்களை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கலாம்.

இத்தகைய நன்மைகளைக் கொண்டுள்ள காளானில் சாதம் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

தேவையானவை

பாஸ்மதி அரிசி – 2 கப்

காளான் -– 10,

பெரிய வெங்காயம் – – 1,

இஞ்சி– – 1 துண்டு,

பூண்டு – –6 பல்,

வெங்காயத் தாள் – – 2

சில்லி சோஸ்– 1 கரண்டி

சோயா சோஸ்– – 1 டேபிள் ஸ்பூன்,

மிளகுத்தூள் – – சிறிதளவு

உப்பு– தேவையானளவு,

செய்முறை:

முதலில் சாதத்தை உதிர் உதிராக வடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம், இஞ்சி, பூண்டு, காளான் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
பின் அடுப்பில் ஒரு சட்டியை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு  நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை வதக்குங்கள்.

வெங்காயம் நிறம் மாறி வதங்கியதும் காளானை சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளுங்கள்.
பின் சில்லி சோஸ், சோயா சோஸ், மிளகுதூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் இரு நிமிடயங்கள் கிளறுங்கள்.

பின் பொடியாக நறுக்கிக் கொண்ட வெங்காயத்தாளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின் சூடான சாதத்தை இந்தக் கலவையுடன் சேர்த்து கமகம வாசனையுடன்  இறக்கி பரிமாறுங்கள்.

இப்போது 10 நிமிடங்களின் காளான் சாதம் ரெடி.

#cookingrecipe

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 1
சினிமாபொழுதுபோக்கு

கோலிவுட்டில் புது ஜோடி!! சூர்யாவின் அடுத்த பட ஹீரோயின்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ...

10 4
சினிமாபொழுதுபோக்கு

தொகுப்பாளினி பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து...

9 4
சினிமாபொழுதுபோக்கு

38 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கிறாரா சமந்தா

நடிகை சமந்தா தெலுங்கில் வெளிவந்த Ye Maaya Chesave திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின்...

11 3
ஏனையவைசினிமாபொழுதுபோக்கு

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்.. பூரிப்பில் ஷாலினி!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது...