இலகுவாக செய்யலாம் காளான் கறி
காளான் கறி செய்வது கஷ்டம் என நினைப்போருக்கு இதோ இலகுவில் காளான் கறி செய்வது எப்படி என பார்ப்போம்.
காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தக் கூடியது. இதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
தேவையான பொருள்கள்
காளான் – 200 கிராம்
தக்காளி – 1
பூண்டு– 4 பல்
சின்ன வெங்காயம் – 20
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் – 3 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை– 1 பிடி
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி
செய்முறை
காளானை சுத்தப்படுத்த இரண்டு சிட்டிகை உப்பு கலந்து ஒரு நிமிடம் ஆனதும் கழுவி எடுத்துக்கொள்ளுங்கள்.
வெங்காயம், தக்காளியை நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
பின் காளானை இரண்டு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
சீரகம் , மிளகு மற்றும் தேங்காயத் துருவல் ஆகியவற்றை அரைத்துக்கொள்ளுங்கள்.
சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், உள்ளி, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வதக்கி பின் அரைத்து வைத்துக்கொண்ட சீரக மாஸாலாவையும் போட்டு 2 நிமிடங்கள் மிதமான தீயில் விட்டு வதக்குங்கள்.
அதன் பின்னர் காளானையும் அதனுள் போட்டு 2 நிமிடங்கள் தீயில் வைத்து வதக்குங்கள்.
பின் தேவையான அளவு சுடுதண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் போட்டு கிளறுங்கள். காளான் வெந்து குழம்பு கெட்டியானதும் இறக்கிவிடுங்கள்.
இப்போது சுவையான காளான் குழம்பு ரெடி.
Leave a comment