தினை வெஜிடபிள் கொழுக்கட்டை!

Thinai Kolukattai

சத்துக்கள் நிறைந்த தினை வெஜிடபிள் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்

தினை அரிசி – 1 கப்
வெங்காயம் – 1
கேரட் – 1
ப.மிளகாய் – 2
தேங்காய் – 1 துண்டு
கடுகு – 1 தேக்கரண்டி
உளுந்து – 2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
கொத்தமல்லி – 2 கைப்பிடி
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை

தேங்காய், கேரட்டை துருவிக்கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தினை அரிசியை 1 மணி நேரம் ஊறவைத்த பின்னர் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்..

ஓரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து, காய்கறிகள் நன்றாக வதங்கியதும் அரைத்த அரிசி மாவை ஊற்றி கிளறவும்.

மாவு நன்கு வெந்து சுருண்டு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி சட்டியில் 15 வேக வைத்து இறக்கி பரிமாறவும்.

இப்போது தினை வெஜிடபிள் கொழுக்கட்டை ரெடி.

HealthyRecipes

Exit mobile version