பூண்டுப் பொடியை தயார் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
பூண்டு – கால் கப்
தேங்காய் துருவியது – கால் கப்
உப்பு – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – காரத்துக்கு ஏற்ப
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பின்னர் அதில் காய்ந்த மிளகாயை போட்டு வதக்கிக்கொண்டு, அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய் சேர்த்து கிளறி ஆறவிடவும்.
ஆறியதும் மிளகாய் தூள், உப்பு, பூண்டு, தேங்காய் அனைத்தையும் மிக்சியில் போட்டு சிறிது கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
இப்போது சுவையான பூண்டு பொடி தயார்.
#HealthyRecipes
Leave a comment