சுவையான பேரிச்சம்பழக் கேக்!

Dates Cake

பேரீச்சம் பழத்தைச் சேர்த்து கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பேரீச்சம்பழம் – 25 (விதை நீக்கப்பட்டது)
மைதா – 1 கப்
பால் – 3 /4 கப்
சர்க்கரை – 3 /4 கப்
சமையல் சோடா – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 1 /2 கப்
அக்ரூட், முந்திரி – தேவையான அளவு

செய்முறை :

பேரீச்சம்பழத்தை விதை நீக்கிவிட்டு பாலில் 20 நிமிடங்கள் ஊற வைத்து, நன்றாக ஊறியதும் அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

நன்றாக அரைத்த விழுதுடன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் மைதா, சமையல் சோடா இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கலந்த மாவை அரைத்த விழுதுடன் சிறிது சிறிதாக சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாகக் கலக்கவும்.

இறுதியாக அக்ரூட், முந்திரி ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

பேக்கிங் பானில் வெண்ணெய் தடவிய பின்னர் கலவையை ஊற்றி பரப்பவும்.

மைக்ரோவேவ் ஓவன் 350 F ல் சூடு பண்ணவும்.

பின்னர் பேக்கிங் பானை வைத்து 350 Fஇல் 35 – 40 நிமிடங்களுக்கு பேக் செய்து எடுக்கவும்

#HealthyRecipes

Exit mobile version