அவசர உலகில் காலை உணவை அனைவரும் தவிர்த்து வருகின்றனர். காலை உணவுக்கு நேரம் ஒதுக்குவதில்லை. ஆனால் காலை உணவே உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.
காலையில் இரண்டே நிமிடங்களில் தயாரிக்கக் கூடிய ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் வாழைப்பழ சாலட் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
வாழைப்பழங்கள் -– 2/ 3
தயிர் – – 5 மேசைக்கரண்டி
தேன் – – 3 மேசைக்கரண்டி
தேங்காய்ப் பூ – – 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் -– ஒரு சிட்டிகை
கொத்தமல்லி – – சிறிதளவு
செய்முறை :
கொத்தமல்லி இலையை சிறிது சிறிதாக பொடியாக நறுக்கிவைத்து கொள்வோம்.
வாழைப்பழத்தின் தோலை நீக்கி வட்டமாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைப்பழத் துண்டுகளை இட்டு தேன், தயிர், தேங்காய் பூ, ஏலக்காய் தூள் போட்டு நன்றாக கலக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை போட்டு பரிமாறவும்.
சத்தான வாழைப்பழ சாலட் ரெடி
Leave a comment