சமையல் குறிப்புகள்
சம்பா ரவை வெண் பொங்கல்
இந்த சம்பா கோதுமை ரவையில் பொங்கல் செய்து சாப்பிட்டுப் பாருங்கள் சுவை மட்டுமல்ல ஆரோக்கியமும் நிறைந்ததும் ,சர்க்கரை நோயாளிகளுக்கும் இது நல்ல காலை உணவாகும்.
சுவையான சத்தான சம்பா ரவை வெண் பொங்கல் சுலபமான முறையில் எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
சம்பா கோதுமை ரவை – 1 கப்
பாசி பருப்பு – அரை கப்
உப்பு – சுவைக்கு
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
தண்ணீர் – 3 கப்
எண்ணெய் – 4 டீஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் – 2 டீஸ்பூன்
நெய் – 3 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
ப.மிளகாய் – 3
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
இஞ்சி – 1 துண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
முந்திரி – 6
செய்முறை
இஞ்சி, ப.மிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பாசி பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்த பின்னர் குக்கரில் போட்டு 3/4 தண்ணீர் ஊற்றி 2 விசில் விடவும்.
அடுத்ததாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கோதுமை ரவையை வறுத்துக்கொள்ளுங்கள். சற்று வாசனை வரும் அப்போது வேக வைத்த பாசி பருப்புடன் ரவையை சேர்த்து கிளறுங்கள்.
பின் 3 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். குக்கரை மூடி விடுங்கள். 2-3 விசில் வரும் வரைக் காத்திருங்கள்.
விசில் வந்ததும் குக்கரை திறந்து சூடு பதத்திலேயே கிளறுங்கள். தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பொங்கலில் கொட்டி கிளறுங்கள். அவ்வளவுதான் சம்பா கோதுமை ரவை வெண் பொங்கல் தயார்.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க சிவராஜ்குமார் வாங்கிய சம்பளம்.. எவ்ளோ தெரியுமா? - tamilnaadi.com