Connect with us

சமையல் குறிப்புகள்

ஹோட்டல் தேவையில்லை – வீட்டிலேயே செய்யலாம் பீட்ஸா

Published

on

1716880 how to make homemade pizza

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் பீட்ஸாவும் ஒன்று. இதனை இலகுவில் வீட்டிலேயே செய்து பரிமாறலாம்.

தேவையான பொருட்கள்:

மைதா மா – 4 கப்
ஈஸ்ட் – 5 கிராம்
சீனி – அரை தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
ஸ்டப்பிங் செய்ய பீட்ஸா சாஸ் – தேவையான அளவு
தக்காளி – ஒன்று
பெரிய வெங்காயம் – 1
கேரட் – ஒன்று
குடை மிளகாய் – பாதி
பச்சை மிளகாய் – ஒன்று
துருவிய சீஸ் – தேவையான அளவு

செய்முறை :
காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வெதுவெதுப்பான தண்ணீரில், ஈஸ்ட், உப்பு மற்றும் சீனி சேர்த்து நன்றாக கலக்கிய பின்னர் ஒரு கப் மைதாவை சேர்த்து நன்கு கலக்கிக் கலவையை 10 நிமிடம் எடுத்து வைக்கவும்.

10 நிமிடம் கழித்து, 3 கப் மைதாவில் 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கலக்கி வைத்த கலவையை சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பரோட்டாவுக்கு பிசையும் மாவை விட சற்று மிருதுவாக பிசைய வேண்டும்.

பிசைந்த மாவினை ஒரு ஈரத் துணியால் மூடி ஒரு மணி நேரம் வைத்து பார்த்தால் அது இரு மடங்காக அதிகரித்து இருக்கும். மாவினை வெளியே எடுத்து மீண்டும் நன்றாக பிசைந்து, மீண்டும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அரை மணி நேரம் கழித்து, அவன் ட்ரேயில் மாவை போட்டு சமமாக கையிலேயே விரித்து விடவும். ஓரங்களில் விரலால் ஒரே மாதிரியாக அழுத்தி விடவும். பீட்ஸா பேஸ் ரெடி. இப்போது பீட்ஸா மீது சாஸ் தேவையான அளவு தடவிய பின்னர் காய்கறிகளை ஒன்றின் பின் ஒன்றாக தூவவும். துருவிய சீஸை தேவையான அளவு பரப்பி விடவும்.

பின் சிறிது எண்ணெய்யை சீஸ் மேல் ஆங்காங்கே சேர்க்கவும். பின்னர் பீட்ஸாவின் ஓரங்களிலும் எண்ணெய் தடவி விடவும். இதனால் வேகும் போது கிறிஸ்பியாக இருக்கும். பின் ட்ரேவை எலக்ட்ரிக் அடுப்பின் மேல் ஸிம்மில் வைத்து சூடாக்கவும். ஃப்ளேம் கொண்ட அடுப்பு எனில் ஃபுல் ஃப்ளேமில் தோசை கல்லை வைத்து அதன் மேல் ட்ரேவை வைக்கவும்.

ட்ரே நன்கு சூடானதும் எடுத்து விடவும். பீட்ஸாவின் ஓரங்கள் பொன்னிறத்தில் மாறி, சீஸ் காய்கறிகளுடன் நன்கு கலந்திருக்கும் போது வெளியே எடுக்கவும். இப்போது சூப்பரான பீட்சா ரெடி.

#LifeStyle