tamilni 124 scaled
சினிமாசெய்திகள்

‘மஞ்சுமல் பாய்ஸ்’ இளையராஜாவை ஏன் சந்திக்கலை.. ஒருவேளை இதுதான் காரணமோ?

Share

‘மஞ்சுமல் பாய்ஸ்’ இளையராஜாவை ஏன் சந்திக்கலை.. ஒருவேளை இதுதான் காரணமோ?

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘மஞ்சுமல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் கேரளாவை விட தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு இருப்பதால் கேரள வசூலை விட தமிழக வசூல் தான் அதிகமாக உள்ளது என்றும் மொத்தத்தில் இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் குழுவினர் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தான் சுற்றி வருகின்றனர் என்பதும் தமிழக திரை உலக பிரபலங்களை நேரில் சந்தித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்தது. முதலில் கமல்ஹாசனின் சந்தித்த அவர்கள் சில மணி நேரம் இந்த படத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள் என்பதும் கமல்ஹாசனும் ’குணா’ படம் எடுக்கும்போது நடந்த சில வித்தியாசமான அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இதனை அடுத்து சந்தன பாரதி, சித்தார்த், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட பலரை ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படக்குழுவினர் சந்தித்தனர். ‘குணா’ படத்திற்கு சம்பந்தமே இல்லாத பலரை சந்தித்து வரும் ‘மஞ்சுமல் பாய்ஸ்’ குழுவினர் இந்த படம் வெற்றி அடைய மிகப்பெரிய காரணமாக இருந்த இசைஞானி இளையராஜாவை இன்னும் சந்திக்கவில்லை என தெரிகிறது.

‘மஞ்சுமல் பாய்ஸ்’வெற்றிக்கு இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட ’கண்மணி அன்போடு காதலன் நான்’ என்ற இளையராஜா கம்போஸ் செய்த பாடலும் ஒரு மிகப்பெரிய காரணம் என்றும் இந்த பாடலை நீக்கிவிட்டு இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக இந்த படம் இந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்காது என்றும் சமீபத்தில் சந்தான பாரதி பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் தனது பாடல் பயன்படுத்தப்பட்டு அந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தும் தனக்கு எந்த ராயல்டியும் ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படக்குழுவினர் தரவில்லை என்ற கோபத்தில் இளையராஜா இருப்பாரோ என்பதால் தான் படக்குழுவினர் சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இளையராஜாவை ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படக்குழுவினர் சந்தித்ததாகவும் அது குறித்த புகைப்படம் தான் வெளியாகவில்லை என்றும் இன்னொரு தரப்பினர் கூறி வருகின்றனர். எது உண்மை என்பது போக போகத்தான் தெரியும்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...