tamilni 123 scaled
சினிமாசெய்திகள்

’பெண் சக்தி’ பாட்டு தேவையா? தனுஷை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Share

’பெண் சக்தி’ பாட்டு தேவையா? தனுஷை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

நடிகர் தனுஷ் நேற்று தனது சமூக வலைதளத்தில் ’பெண் சக்தி’ என்ற பாடலை வெளியிட்டு மகளிர் தினத்திற்கு வாழ்த்து கூறிய நிலையில் மனைவியை வைத்து வாழ தெரியாமல் பிரிந்துவிட்ட உங்களுக்கு ’பெண் சக்தி’ எல்லாம் தேவைதானா என்று கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் திடீரென இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்த பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் ரஜினி ரசிகர்கள் இந்த பிரிவை ஏற்றுக்கொள்ளவில்லை. என்ன இருந்தாலும் தனுஷ், தனது மனைவியை பிரிந்து இருக்க கூடாது என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் மீண்டும் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் குடும்ப அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷ் நேற்று தனது சமூக வலைதளத்தில் பாடகி ஸ்வேதா மோகன் பாடிய மகளிர் சிறப்பு பாடல் ஒன்றை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். ‘பெண் சக்தி’ என்ற பாடல் பாடலை தனது சமூக வலைதளத்தில் வெளியிடுவதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.

பெண்களின் முன்னேற்றத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த பாடலை பாடகி ஸ்வேதா மோகன் கம்போஸ் செய்து பாடியுள்ளார் என்பதும் கிருத்திகா நெல்சன் என்பவர் இந்த பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் தனுஷ் இந்த பாடலை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை அடுத்து சில கண்டனங்கள் மட்டும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலர் ரஜினி பொண்ணை நீங்கள் பிரிந்திருக்காமல் இருந்திருக்கலாம் என்றும் முடிந்தால் மீண்டும் சேர்ந்து வாழ முயற்சி செய்யுங்கள் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...