தமிழ் சினிமாவை ஆண்ட ஒரு நடிகர், இவரது பயணம் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் ஆசை. ஆனால் அவரோ இதைவிட பெரிய மேடையை பார்க்க தன்னை தயார்படுத்திக்கொண்டு வருகிறார்.
அண்மையில் விஜய்யின் கடைசி படத்திற்கு முந்தைய படமாக கோட் படம் வெளியானது, முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் ரூ. 350 கோடியை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
வரும் நாட்களில் விடுமுறை நாட்கள் வருவதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 13) விஜய்யின் கடைசி படத்தின் அறிவிப்பு இன்று வெளியாக இருப்பதாக எமோஷ்னலான வீடியோவுடன் அறிவித்தார்கள்
விஜய்யின் கடைசி படமான அவரது 69வது படத்தை எச்.வினோத் தான் இயக்கப்போகிறாராம், இந்த படத்திற்கு இசை அனிருத் தானாம்.