9 31 scaled
சினிமா

நீயா நானாவில் அனைவரையும் கண்கலங்க வைத்த பையனுக்கு உதவிய தளபதி விஜய்..

Share

நீயா நானாவில் அனைவரையும் கண்கலங்க வைத்த பையனுக்கு உதவிய தளபதி விஜய்..

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

இதை தொடர்ந்து தளபதி 69ல் நடிக்கவுள்ளார். இதுவே விஜய்யின் கடைசி படம் ஆகும். இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் படித்துக்கொண்டே வேலை பார்த்து வரும் மாணவ, மாணவிகளை வைத்து விவாதம் நடைபெற்றது. இதில் ஒரு பையன் தனது தாய்க்காக தான்படும் கஷ்டங்கள் குறித்து மனமுருகி பேசியிருந்தார்.

இதை அறிந்த இசையமைப்பாளர் தமன் அந்த மையனுக்கு இருசக்கர வாகனம் வாங்கி தருகிறேன் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து தளபதி விஜய்யும் உதவி செய்துள்ளார்.

வீட்டிற்கு தேவையான பொருட்களையும், அவர்களின் வங்கி கணக்கில் ரூ. 25 ஆயிரமும், அவருடைய கல்லூரி படிப்பிற்கான செலவையும் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளாராம். இதுகுறித்து அந்த பையனின் தாய் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...