tamilni Recovered 19 scaled
சினிமாசெய்திகள்

‘தளபதி 69’ இயக்குனர் பட்டியலில் புதிதாக இணைந்த இயக்குனர்.. ஜெயம் ரவியால் நடந்த சோகம்.

Share

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான ’தளபதி 69’ படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஒரு இயக்குனர் இணைந்ததாகவும் ஆனால் ஜெயம் ரவியால் அந்த வாய்ப்பு பறிபோனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் ’தளபதி 69’ படத்துடன் திரையுலகில் இருந்து விலகப் போவதாகவும் தனது கடைசி படம் ஒரு காரசாரமான அரசியல் கதையம்சம் கொண்டதாக இருக்க வேண்டும் என்று விஜய் விரும்புவதாகவும் கூறப்பட்டது.

இதனை அடுத்து கார்த்திக் சுப்புராஜ், எச் வினோத், வெற்றிமாறன், அட்லி உள்பட ஒரு சில இயக்குனர்கள் விஜய் இடம் கதை கூறி இருப்பதாகவும் இருப்பினும் இன்னும் ’தளபதி 69’ படத்தின் இயக்குனர் யார் என்பதை விஜய் முடிவு செய்யவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’தளபதி 69’ இயக்குனர் பட்டியலில் சமீபத்தில் அந்தோணி பாக்யராஜ் இணைந்துள்ளார். அவர் கூறிய ஒரு அட்டகாசமான அரசியல் கதை விஜய்க்கு பிடித்து விட்டதாகவும் கூடிய விரைவில் ஒரு நல்ல செய்தி சொல்கிறேன் என்று விஜய் அவரிடம் கூறியதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான ’சைரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்த படத்தின் சில காட்சிகளை ஜெயம் ரவி வலுக்கட்டாயமாக மாற்றியதாகவும் அதனால் தான் இந்த படம் தோல்வி அடைந்ததாகவும் அந்தோணி பாக்யராஜ் தரப்பில் கூறியுள்ள நிலையில் இந்த படத்தின் தோல்வி காரணமாக ’தளபதி 69’ படத்தின் வாய்ப்பு தனக்கு கிடைக்கப் போவதில்லை என்று புலம்பி வருவதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் ’தளபதி 69’ வாய்ப்பை ஜெயம் ரவியால் இழந்தேன் என்று அவர் தனது நெருக்கமானவர்களிடம் கூறி வருவதாகவும் கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...