அட்டகாசமான வசூல் வேட்டையில் சூரியின் கருடன் படம்… இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?

image 51 2024 03 d138b72841839de5ee192b4bf73e709c

அட்டகாசமான வசூல் வேட்டையில் சூரியின் கருடன் படம்… இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?

நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க கடந்த மே 31ம் தேதி வெளியான திரைப்படம் கருடன்.

துரை செந்தில்குமார் இயக்க சூரியை தாண்டி சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒரு நல்ல கதைக்களம் கொண்ட கிராமத்து ஆக்ஷன் படத்தை பார்த்த திருப்தி ரசிகர்களுக்கு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூரி நடிப்பில் விடுதலை 2, கொட்டுக்காளி ஆகிய படங்களும் வெளியாக இருக்கிறது.

படம் வெளியான நாள் முதல் நல்ல விமர்சனங்களையும், வசூல் வேட்டையும் நடத்தி வருவதால் படக்குழு செம குஷியில் உள்ளனர்.

கருடன் மொத்தமாக இதுவரை ரூ. 27 கோடிக்கு வசூலிக்க தமிழகத்தில் மட்டுமே ரூ. 20 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version