தங்க நிறத்திலான பட்டு, உடல் முழுவதும் விலையுயர்ந்த பட்டு, கலக்கிய சோபிதா… இத்தனை சவரன் இருக்குமா?
தெலுங்கு சினிமாவில் 2 சூப்பரான விஷயங்கள் நடக்க இருந்தது, தற்போது முடிந்தது.
ஒன்று அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படம், இன்று டிசம்பர் 5 மக்கள் பார்வைக்கும் வந்துவிட்டது, ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். இன்னொன்று நட்சத்திர ஜோடி நாக சைத்தன்யா-சோபிதா திருமணம்.
இவர்களது திருமணம் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நேற்று இரவு 8.13 மணிக்கு சுபமுகூர்த்தத்தில் நடந்து முடிந்துள்ளது.
ஜொலிக்கும் தங்க நிறத்தாலான பட்டு புடவை மற்றும் உடல் முழுக்க தங்கம் மற்றும் விலையுயர்ந்த நகைகளை அணிந்துகொண்டு எல்லோரையும் பிரம்மிக்க வைத்துள்ளார் சோபிதா.
அவர் அணிந்த நகைகள் மட்டுமே சுமார் 100 சவரன் இருக்கும் என கமெண்ட்ஸ் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.