ஜெயிலர் சிவராஜ்குமார் படத்தில் கேமியோ ரோலில் நடித்த சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாவீரன் சூப்பர்ஹிட்டானது.
இதை தொடர்ந்து தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ் கே 21 படத்தில் நடித்து வருகிறார். கமல் ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
எஸ் கே 21 படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்க இதற்கு இடையிலேயே அனைவரும் எதிர்பார்க்கும் சிவாவின் அயலான் திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிவகார்த்திகேயன் பெரிதும் வேறொரு நடிகரின் படத்தில் கேமியோ ரோலில் நடித்தது இல்லை.
ஆனால், தன்னுடைய சினிமா கேரியர் ஆரம்ப காலகட்டத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றி சிவராஜ்குமாருடன் இணைந்து நடனமாடி இருக்கிறார்.
அந்த வீடியோ ஜெயிலர் ரிலீஸுக்கு பின் தற்போது வைரலாகி வருகிறது. ஜெயிலர் திரைப்படத்தில் வெறித்தனமான மாஸ் கேமியோ ரோலில் சிவராஜ்குமார் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment