சினிமாசெய்திகள்

ஐஸ் தொட்டிக்குள் உட்கார்ந்து தியானம்.. நடிகைக்கு ரொம்பவே தில் தான்.. வைரல் வீடியோ..!

Share
tamilni 98 scaled
Share

ஐஸ் தொட்டிக்குள் உட்கார்ந்து தியானம்.. நடிகைக்கு ரொம்பவே தில் தான்.. வைரல் வீடியோ..!

தமிழ் நடிகை ஒருவர் ஐஸ் கட்டிகள் உள்ள தொட்டிக்குள் உட்கார்ந்து தியானம் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரைப்பட நடிகைகளில் ஒருவரான சுனைனா கடந்த 2008 ஆம் ஆண்டு ’காதலில் விழுந்தேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் ’மாசிலாமணி’ ’வம்சம்’ ’திருத்தணி’ உட்பட சில படங்களில் நடித்தார். விஜய் நடித்த ’தெறி’ திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். மேலும் கடந்த ஆண்டு வெளியான ’ரெஜினா’ படத்தில் கூட அவர் நடித்துள்ளார் என்பதும் திரைப்படங்களில் மட்டும் இன்றி ஒரு சில சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சுனைனா சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் தனது கிளாமர் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மில்லியனுக்கு மேல் இன்ஸ்டாவில் ஃபாலோயர்கள் வைத்துள்ள சுனைனா சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ் தொட்டிக்குள் உட்கார்ந்து தியானம் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. ஐஸ் தொட்டிக்குள் உட்கார்ந்து எப்படி தியானம் செய்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

 

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...