24 66c18e1fae8fc
சினிமா

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்! ப்ரோமோ வீடியோ

Share

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்! ப்ரோமோ வீடியோ

சின்னத்திரையில் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. TRP-யிலும் டாப் சீரியலாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் தம்பி தவறான பாதையில் சிட்டி என்பவருடன் பயணித்து கொண்டு இருப்பதால், முத்து கடும் கோபத்தில் இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை கூட வந்தது.

இதில் மீனாவின் தம்பியின் கையை கூட முத்து உடைத்தார். இப்படியிருக்க மீனாவின் தம்பிக்கு பிறந்தநாள், அதனால் கோவிலுக்கு சென்று தம்பி பிறந்தநாளில் பங்கேற்க வேண்டும் என ஆசையுடன் முத்துவிடம் வந்து மீனா கேட்கிறார். ஆனால் நீ அங்கு போகவே கூடாது என கண்டிப்பாக முத்து கூறிவிடுகிறார்.

ஆனால், முத்து சொன்னதை மீறி தனது தம்பியின் பிறந்தநாள் விழாவிற்கு மீனா சென்றுவிடுகிறார். மீனாவை தேடி வீட்டிற்கு வரும் முத்துவிடம், மீனா வீட்டில் இல்லை அவளுடைய தம்பியின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று இருக்கிறாள் என விஜயா கூறிவிடுகிறார்.

இதனால் கடும் கோபத்திற்கும் ஆளாகும் முத்து, உடனடியாக மீனாவை சந்திக்க கோவிலுக்கு செல்கிறார். இதன் பின் என்ன நடக்கப்போகிறது என்று வரும் வாரம் எபிசோடில் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...