24 66c19e0231820
சினிமா

இதுவரை ராயன் படம் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! எவ்வளவு தெரியுமா

Share

இதுவரை ராயன் படம் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! எவ்வளவு தெரியுமா

நடிகர் தனுஷின் 50வது திரைப்படம் ராயன். இதனை அவரே இயக்கி நடித்தும் இருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

நடிகர் தனுஷிற்கு அவருடைய 25வது படம் வேலையில்லா பட்டதாரி எப்படி அமைந்ததோ, அதே போல் தற்போது 50வது படம் ராயன் மாபெரும் அளவில் வெற்றியை தேடி கொடுத்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து முதல் முறையாக எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்திருந்தார்.

மேலும் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், சரவணன், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், ராயன் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 155 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

 

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...