இறக்கும் நாள் அப்படி எல்லாம் நடந்தது, திடீரென ஏற்பட்ட இறப்பு- சீரியல் நடிகை சங்கீதா எமோஷ்னல்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்குபவர் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் ரெடின் கிங்ஸ்லி.
இவர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படம் மூலம் அறிமுகமானவர் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார்.
46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி கடந்தாண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார்.
மைசூரில் இருவருக்கும் மிகவும் எளிமையாக திருமணம் நடந்தது, புகைப்படங்கள் வெளியாக என்னது இவர்கள் காதலித்தார்களா என கமெண்ட் செய்து வந்தார்கள்.
திருமணத்திற்கு பிறகு பல விமர்சனங்களை எதிர்க்கொண்ட சங்கீதா அண்மையில் தனது வாழ்க்கையில் சந்தித்த சோகமான விஷயம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், அப்பாவிற்கு அன்று மார்பு வலி இருந்து இருக்கு ஆனால் அவர் வெளியே சொல்லவில்லை.
நானும் அம்மாவும் வெளியில் கிளம்பியதால் தண்ணீர் பாட்டில் பேக்கை கையில் எடுத்துக்கொடுத்து டாடா காட்டி அனுப்பி வைத்தார், நாங்களும் கிளம்பிவிட்டோம். அப்போது புது கார் பிரச்சனை செய்ததால் இரண்டு நிமிடத்தில் திரும்பிவந்து வேறு ஒரு கார் எடுத்துக்கொண்டு சென்றோம்.
நாங்கள் வெளியில் போகாமல் இருக்க இப்படி எல்லாம் நடந்தது. ஆனால் நாங்கள் சென்ற பிறகு தான் அப்பாவிற்கு வலி அதிகமாகி வீட்டிற்கு வருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.
அப்பாவின் இடத்தை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் அந்த இடத்தை என்னால் சரி செய்ய முடியவில்லை, கல்யாணத்திற்கு அப்பா இல்லாதது எனக்கு வருத்தம் தான் என எமோஷ்னலாக பேசியுள்ளார்.
Comments are closed.