சமுத்திரக்கனி ஹீரோவா..? ஐயோ எனக்குத் தெரியாது – பிரபல நடிகை

samuthirakani

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது பிரபல நடிகை ஒருவர் கூறி இருக்கிறார்.

பல மொழிகளில் நடித்து வரும் சமுத்திரக்கனி ஹீரோ என்று தெரியாது என நடிகை இனியா தெரிவித்துள்ளார்.

நீலம் புரடக்ஸ்ன் சார்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ரைட்டர்.

இந்தப்படத்தில் இனியா கதாநாயகியாக நடித்துள்ளார். எதிர்வரும் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 24 ஆம் திகதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்தநிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் இனியா பேசும் போது, ரைட்டர் படத்தின் இயக்குனர் பிராங்க்ளின் என்னிடம் கதை சொல்லும் போது சிறப்பாக சொன்னார். ஆனால் அதில் என் கதாபாத்திரம் மட்டும் சொல்லவே இல்லை. உங்கள் கதாபாத்திரம் சஸ்பென்ஸ் என்று சொன்னார்.

ரைட்டர் படத்தில் சமுத்திரகனி ஹீரோ என்று தெரியாது. ஏதோ முக்கியமான கதாபாத்திரம் நடிக்கிறார் என்று நினைத்தேன். படப்பிடிப்பு தளத்தில் தான் தெரியும் அவர்தான் ஹீரோ என்று தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.

#CinemaNews

Exit mobile version