தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் சமந்தா, ரசிகரின் பதிவுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
நடிகை சமந்தா புஷ்பா படத்தில் ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சியாக குத்தாட்ட நடனமாடியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தப் பாடலை யூ-டியூப்பில் அதிகமானோர் பார்த்துள்ளனர். இருப்பினும் சமந்தாவின் கவர்ச்சி நடனத்தை வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.
‘‘விவாகரத்து செய்து வாழ்க்கையை கெடுத்து கொண்ட குத்தாட்ட நடிகை சமந்தா, ஜென்டில்மேனிடம் (நாகசைதன்யா) இருந்து ரூ.50 கோடியை வரியில்லாமல் திருடிக்கொண்டார்” என்று கூறியுள்ளார்.
இதைப்பார்த்த சமந்தா ‘‘கடவுள் உங்கள் ஆன்மாவை ஆசிர்வதிக்கட்டும்” என்று டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். இப்பதிவைப் பார்த்த ரசிகர் தன்னுடைய பதிவை நீக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
#CinemaNews,
Leave a comment