24 66fb56ed79964
சினிமா

மருத்துவமனையில் ரஜினிகாந்த்.. காரணம் என்ன? முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவு

Share

மருத்துவமனையில் ரஜினிகாந்த்.. காரணம் என்ன? முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவு

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அனைவருக்கும் கொடுத்தது.

இன்று அவருக்கு பரிசோதனை மேற்கொள்ள போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முக்கியமாக ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு ரஜினிகாந்த் செல்லவில்லை என சொல்லப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பே இதற்காக மருத்துவர்களிடம் கலந்து பேசி ஆலோசனை செய்து, அதன்பின்தான் பரிசோதனைக்கு முடிவு செய்துள்ளார்களாம்.

ரஜினிகாந்தின் அடிவயிற்று பகுதியில் வீக்கம் இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான காரணங்கள் வெவ்வேறாக இருக்கலாம் என்கின்றனர். இதனால்தான் அக்டோபர் 1ஆம் தேதி பரிசோதனை மேற்கொள்ளவே, ஒரு நாள் முன்பாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில் ரஜினிகாந்த் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்” என கூறி பதிவு செய்துள்ளார்.

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...