நடிகை நயன்தாரா குடும்பத்துடன் என்ன செய்கிறார் பாருங்க.. கண்ணே பட்டுடும் போல
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக புகழின் உச்சத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நயன்தாரா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் டாப் நடிகையாக ஜொலித்து கொண்டு இருக்கிறார்.
இன்றும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக சிறந்த நடிப்பாலும், கொள்ளை கொள்ளும் அழகாலும் வலம் வரும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து 2022 – ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் உயிர் மற்றும் உலக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கிடைக்கும் நேரத்தை கணவர் மற்றும் குழந்தைகளுடன் செலவிட்டு வரும் நயன்தாரா.
தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவரது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வெடி வெடித்து கொண்டாடும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்