9 10
சினிமாபொழுதுபோக்கு

தமன்னா, காஜல் இல்லை..தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் யார் தெரியுமா

Share

தமன்னா, காஜல் இல்லை..தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் யார் தெரியுமா

சினிமாவை பொறுத்த வரை ஒரு படத்தின் வெற்றி தோல்வியை பொறுத்து தான் அந்த நடிகர் மற்றும் நடிகைகளின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.

அதில், குறிப்பாக தற்போது தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் குறித்து கீழே காணலாம்.

நயன்தாரா:
‘ஐயா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா

இவர் ஒரு படத்திற்கு மட்டுமே ரூ. 13 முதல் ரூ.15 கோடி வரை சம்பளம் பெற்று அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் முதல் இடத்தில் உள்ளாராம்.

பாகுபலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா. இன்றும் ரசிகர்கள் பலரால் பாராட்டப்படும் அளவிற்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தார்.

அவ்வாறு பிரபலமான இவர் ஒரு படத்திற்கு மட்டும் ரூ. 4 கோடி முதல் ரூ.7 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது.

தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவில் நடித்து பிரபலமானவர் பூஜா ஹெக்டே. தற்போது, தமிழில் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.

இவர் ஒரு படத்திற்கு மட்டும் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என சொல்லப்படுகிறது.

‘நீ மனசு எனக்கு தெலுசு’ என பல தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான த்ரிஷா ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி முதல் ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

கீதா கோவிந்தம்,’ ‘சரிலேரு நீக்கேவரு’ மற்றும் ‘புஷ்பா: தி ரைஸ்’ என பல படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா ஒரு படத்தில் நடிக்க ரூ. 3 கோடி முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...