10 scaled
சினிமாசெய்திகள்

சாதி தலைவராக மாறிய பகத் பாசில்! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மாரி செல்வராஜ்

Share

சாதி தலைவராக மாறிய பகத் பாசில்! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மாரி செல்வராஜ்

கர்ணன் படத்தை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இதில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தார்.

இப்படத்தில் சாதி வெறி பிடித்தவராகவும், அரசியல் வாதியாக தத்துரூபமாக பகத் பாசில் நடித்திருப்பார். இவரின் நடிப்பு பாராட்டுக்கள் வந்தாலும், சிலர் ரத்தினவேலை சாதி தலைவராக சித்தரித்து சமூக வலைத்தளங்கள் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது பகத் பாசில் பிறந்த நாள் முன்னிட்டு மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், வணக்கம் பகத் சார்!!! உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன்.

ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.

மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன்.

ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர்.அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன்.. என்று மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...