deccanherald 2026 01 07 dxnsywhj Jana Nayagan
சினிமாபொழுதுபோக்கு

ஜனநாயகன் படத்திற்குத் தடை: தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்ற அமர்வு!

Share

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்குப் படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

படத்தின் சில காட்சிகளுக்காகத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்து, மறுஆய்வுக் குழுவிற்குப் பரிந்துரைத்தது.

இதை எதிர்த்துத் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், நீதிபதி பி.டி.ஆஷா அவர்கள், “புகார்தாரரின் குற்றச்சாட்டு பிற்போக்குத்தனமானது” எனக் கூறி, படத்திற்கு உடனடியாக ‘U/A’ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்துத் தணிக்கை வாரியம் சார்பில் அவசரமாக மேல்முறையீடு செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவதா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் தயாரிப்பு நிறுவனத்தைக் கடுமையாகச் சாடினர்:

“குறிப்பிட்ட ரிலீஸ் தேதியை நிர்ணயித்துவிட்டு நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியாது. தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்கு முன்பே வெளியீட்டுத் தேதியை அறிவித்தது ஏன்?” என வினவினர்.

சான்றிதழ் பெறுவதற்குப் பல்வேறு நடைமுறைகள் இருக்கும்போது, தயாரிப்பு நிறுவனம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். தனி நீதிபதி பி.டி.ஆஷா வழங்கிய உத்தரவிற்குத் தடை விதித்த நீதிபதிகள், வழக்கை வரும் ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தனி நீதிபதியின் தீர்ப்பால் படம் நாளை வெளியாகும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, தற்போதைய உயர்நீதிமன்ற அமர்வின் தடை பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதோடு, பொங்கல் ரிலீஸும் கேள்விக்குறியாகியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...

28 5
பொழுதுபோக்குசினிமா

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவின் பழைய பேட்டி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வைரல்!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத்...

10 11
சினிமாபொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தொடரும் சிக்கல்: ஓடிடி ஒப்பந்தம் ரத்தானதாகத் தகவல்!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’...

07 11
பொழுதுபோக்குசினிமா

துபாய் சிக்கலில் இருந்து மீண்ட அஜித் குமார்: பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தார்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக வான்வெளிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு துபாயில்...