தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார்.
அவர் தனது 71ஆவது வயதில் இன்று இயற்கை எய்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் சென்னை – அடையார் நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானார்.
குணச்சித்திர நடிகரான நடிகர் மதன் பாபு தனது தனித்துவமான சிரிப்பால் பிரபலமானவர்.
இசையமைப்பாளராக திரை வாழ்வை தொடங்கிய அவர், காலப்போக்கில் தனது குணச்சித்திர நடிப்பு திறமையால் பெயர் பெற்றார்.
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.