25 684526f15dfb3
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் இணையும் 25 வயது சென்சேஷனல் நடிகை.. அட இவரா!

Share

மாதரசி மற்றும் பராசக்தி என இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். இதில் முருகதாஸ் இயக்கியுள்ள மதராஸி திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளிவரவுள்ளது.

அதை தொடர்ந்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பராசத்தி வெளிவரும் என்பதுபோல் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.

சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என ஏற்கனவே தகவல் வெளிவந்தது. அதற்காக தான் கோட் படத்தில் கூட கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் என்கின்றனர்.

ஆனால், கோட் படத்தின் ரிலீசுக்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை என்பது போல் கூறப்பட்ட நிலையில், இவர்கள் கூட்டணியில் படம் உருவாவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது என்கின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தில் மொத்தம் இரண்டு கதாநாயகிகள் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் ஒரு கதாநாயகி என்றும், டிராகன் படத்தின் மூலம் சென்சேஷனல் நாயகியாக மாறியுள்ள நடிகை கயாடு லோஹர் மற்றொரு ஹீரோயின் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.

கயாடு லோஹரிடம் படக்குழு பேச்சுவார்த்தை லெவெலில் தான் இருக்கிறார்களாம். விரைவில் படம் குறித்து அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...