tamilni 642 scaled
சினிமாசெய்திகள்

தேடப்படும் குற்றவாளியாக கமல் பட நடிகை அறிவிப்பு.. உடனே கைது செய்ய உத்தரவு..!

Share

தேடப்படும் குற்றவாளியாக கமல் பட நடிகை அறிவிப்பு.. உடனே கைது செய்ய உத்தரவு..!

கமல்ஹாசன் உடன் ’சலங்கை ஒலி’ உள்பட ஒரு சில படங்களில் நடித்த நடிகை ஜெயப்ரதாவை நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு உடனே அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜெயப்பிரதா என்பதும் ஹிந்திலும் இவர் பல படங்கள் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் உடன் ‘சலங்கை ஒலி’ ’நினைத்தாலே இனிக்கும்’ ‘தசாவதாரம்’ விஜயகாந்த் உடன் ’ஏழை ஜாதி’ உள்பட பல படங்களில் நடித்த ஜெயப்ரதா அரசியல்வாதியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடந்த போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக ராம்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஜெயப்பிரதா நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது

ஆனால் ஜெயப்பிரதா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது மட்டும் இன்றி ஏழு முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது

இந்த நிலையில் ஜெயப்பிரதா திடீரென தலைமறைவாகிவிட்டதாக காவல்துறையினர் கூறியுள்ள நிலையில் ஆத்திரமடைந்த நீதிபதி தேடப்படும் குற்றவாளியாக நடிகை ஜெயப்பிரதாவை அறிவித்தார். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...