தமிழை விட்டுவிட்டு இந்தியில் செட்டில் ஆன ஜோதிகா.. சம்பளம் ஒரு படத்திற்கு இத்தனை கோடியா?
நடிகை ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு பல வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி தான் இருந்தார்.
அதன் பிறகு நடிக்க தொடங்கிய அவர் தமிழில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் நடிக்க தொடங்கினார்.
சமீப காலமாக அதில் பெரிய அளவில் ஹிட் கொடுக்க முடியாத நிலையில் ஹிந்திக்கு தற்போது சென்றுவிட்டார். அதற்காக குடும்பத்துடன் மும்பையிலேயே செட்டில் ஆகி இருக்கிறார் ஜோதிகா.
சைத்தான், ஸ்ரீகாந்த் என இரண்டு ஹிந்தி படங்களில் நடித்து ஜோதிகா எல்லோரது கவனம் ஈர்த்து இருக்கிறார். அதனால் அடுத்து அவருக்கு பல வாய்ப்புகளும் வருகிறதாம்.
ஒரு படத்திற்கு 4 முதல் 5 கோடி ருபாய் வரை ஜோதிகா தற்போது சம்பளமாக கேட்கிறாராம். தமிழில் டாப் ஹீரோயின்கள் பெறும் சம்பளத்தை ஜோதிகா அசால்டாக ஹிந்தியில் பெற்று வருகிறார்.
Comments are closed.