கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் டாப் இயக்குனர்!! வாங்க தெரிஞ்சிக்கலாம்..

24 665ad5ca5664e

ஜவான் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்தியா அளவில் பிரபல இயக்குனராக இருக்கிறார் அட்லீ. இவர் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்திற்காக இவருக்கு ரூபாய் 60 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் சென்சேஷனல் இயக்குனராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

தற்போது இவர் ரஜினிகாந்தை வைத்து கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக லோகேஷ் கன்ராஜுக்கு ரூ.60 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குனராக மாறியவர் நெல்சன். ஜெயிலர் படத்திற்காக 20 கோடி சம்பளம் வாங்கிய இவர், அடுத்த படத்துக்கு ரூ.50 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Exit mobile version