tamilni Recovered Recovered 2 scaled
சினிமாசெய்திகள்

Bigg Boss வீட்டில் உள்ளவங்களை உங்களுக்கு நேந்து விட்டிருக்கா…? விளாசித் தள்ளும் வனிதா..!

Share

Bigg Boss வீட்டில் உள்ளவங்களை உங்களுக்கு நேந்து விட்டிருக்கா…? விளாசித் தள்ளும் வனிதா..!

பிக்பாஸ் சீசன் 7 இல் தினமும் ஒரு டாஸ்க் வைத்து பல சண்டைகள் வருவதால், வீடு பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் கடந்தவாரம் ஒரு டாஸ்க்கில் விசித்திரா மற்றும் வனிதா மகள் ஜோவிகாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதில் ஜோவிகாவின் படிப்பை இழுத்து பேசிய விசித்திராவின் வாயை ஒரே வார்த்தையால் ஜோவிகா மூடியுள்ளார். அத்தோடு பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற பெண்களிடம் டாட்டூ வெளியே தெரியும்படி குத்தக்கூடாது எனவும் விசித்திரா ஒரு சமயத்தில் கூறியுள்ளார்.

அந்தவகையில் இதுகுறித்து ஜோதிகாவின் அம்மாவும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா சமீபத்திய வீடியோ ஒன்றில் பேசுகையில் “பிக்பாஸ் வீட்ல இருக்குற பிள்ளைங்க எல்லாம் நீங்க பெத்த பிள்ளைங்க மாதிரி ஓவரா அக்கறை காட்டக்கூடாது. அவங்க டாட்டூ போடுறதையும், தம் அடிக்குறதையும் அவங்க பெற்றோர் பார்த்துப்பாங்க. உங்களுக்கென்ன” எனக் கேட்டு விளாசி தள்ளியுள்ளார்.

அத்தோடு “பிக்பாஸ் வீட்டில் உள்ள பிள்ளைங்களை எல்லாம் உங்களுக்கு நேந்து விட்டுருக்காங்களா? நீங்க 3 பசங்களுக்கு அம்மாவா இருக்கலாம். அதுக்காக மத்த பிள்ளைங்கள ஓவரா கரெக்‌ஷன் பண்ண வேணாம். நீங்க எதுக்காக பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களோ அந்த வேலையை மட்டும் பாருங்க. மத்த விஷயத்துல மூக்கை நுழைக்காதீங்க” எனவும் கூறி விசித்திராவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் வனிதா.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...