அஜித் எடுத்த தவறான முடிவு!! பதிலடி கொடுத்த நடிகை!!
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று படங்கள் தொடர்ந்து ஹெச்.வினோத் உடன் கூட்டணி சேர்ந்த பிறகு தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
அஜித் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது அஜித் கெரியரில் தவறான முடிவு என ஒரு விமர்சகர் கூறி இருப்பதற்கு தற்போது நடிகை காயத்ரி பதிலடி கொடுத்து இருக்கிறார்.
“வெற்றிக்கு அளவுகோளாக பாக்ஸ் ஆபிஸை மட்டும் கணக்கில் எடுத்து கொள்ள கூடாது. சமுதாயத்தில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.”
“ஒப்புதல் என்ற ஒரு விஷயத்தை பற்றி ஒரு விவாதததை தொடங்கி வைத்த படம் அது. இந்த படம் வராமல் இருந்திருந்தால் அதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகி இருக்கும்” என நடிகை காயத்ரி குறிப்பிட்டு இருக்கிறார்.
Leave a comment