சர்வதேச விண்வெளி மையத்தில் முதன்முறையாக திரைப்படம் எடுக்கும் நாடு என்ற பெருமையை ரஸ்யா பெற்றுக்கொள்ளவுள்ளது.
திடீர் உடல்நல குறைபாடு ஏற்படும் விண்வெளி வீரரொருவரை காப்பாற்ற விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பெண் மருத்துவர்
தொடர்பான கதையை மையமாக வைத்து விண்வெளியில் திரைப்படம் எடுக்க ரஸ்யாவின் படப்பிடிப்புக் குழுவொன்று தீர்மானித்துள்ளது.
‘த சேலன்ஜ்’ என படத்திற்கு பெயரிடப்படவுள்ளது.
ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மாஸின் உதவியுடன் கஜகஸ்தானில் உள்ள பைகனூர் காஸ்மோட்ரோமில் இருந்து நடிகை யூலியா பெரசில், இயக்குநர் கிளிம் ஷிபென்கோ, விண்வெளி வீரர் அன்டன் ஷ்காப்லராவ் ஆகியோர் சோயுஸ் எம்எஸ் -19 விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.
12 நாட்கள் விண்வெளியில் காட்சிகளை படமாக்கவுள்ளனர்.
நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் உதவியுடன் விண்வெளியில் வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் டாம் க்ரூஸ் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டே தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தற்போது அமெரிக்காவை ரஷ்யா பின்தள்ளி, புதிய சாதனையை நிலைநாட்டவுள்ளது.
Leave a comment