goog
சினிமாபொழுதுபோக்கு

விவசாயம் செய்யும் ரோபோ – வெளியாகியது ‘கூகுள் குட்டப்பா’ டீசர்

Share

பிக்பாஸ் புகழ் லாஸ்லியா மற்றும் தர்சன் நடிப்பில் உருவாகியுள்ளது ‘கூகுள் குட்டப்பா’. அண்மையில் இப் படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்த நிலையில், படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

kooglekuttappa2

டீசரில் ‘குட்டப்பா’ கதாபாத்திரத்தில் வரும் ரோபோ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரோபோ சமையல் செய்வது, காபி பரிமாறுவது, அம்மியில் மிளகாய் அரைப்பது உள்பட பல வேலைகளை செய்கிறது. அது மட்டுமின்றி வயலில் நாத்து நடுவது, ரைக்டர் ஓட்டுவது உள்பட விவசாய வேலைகளையும் செய்கிறது. இந்த ரோபோவை பார்த்து அது ஆம்பிளையா? பொம்பளையா? என அப்பாவியாக ஒரு பெண் கேள்வி கேட்கும் காட்சியும் டீசரில் உள்ளது.

goo

மலையாளத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்ற ’ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான ‘கூகுள் குட்டப்பா’ கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அவரும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் தர்ஷன் மற்றும் லாஸ்லியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இணைந்து இப் படத்தை இயக்கியுள்ளனர்.

காமெடி கதையம்சத்துடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம், மலையாளத்தைப்போலவே தமிழிலும் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

kooglekuttappa 1

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...