ஆஸ்கர் நாயகி மாயாவை சந்தித்த பிரபல யூடியூபர்! விரைவில் தரமான சம்பவம் இருக்காம்

tamilni 46

ஆஸ்கர் நாயகி மாயாவை சந்தித்த பிரபல யூடியூபர்! விரைவில் தரமான சம்பவம் இருக்காம்

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் ஒருவர் தான் நடிகை மாயா. இவர் ஒரு மேடை நாடக நடிகர். அத்துடன் மேடை நாடகங்களில் நடிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.

மாயா ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபல படுத்திய படம் என்றால் அது கண்டிப்பாக கமல் நடித்த விக்ரம் திரைப்படம் தான். லியோ படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிக் பாஸ் டைட்டில் வின்னராக மாயா வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அர்ச்சனா தான் வெற்றி பெற்றார். ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த மாயாவுக்கு , சிறப்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஒரு சில நாடுகளுக்கு ட்ரிப் அடித்து வந்தார். தற்போது வரையில் இவருக்கான ரசிகர் வட்டாரம் குறையவில்லை எனலாம்.

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் மாயாவை பிரபல யூடியூபர் இர்பான் சந்தித்துள்ளார். இது தொடர்பிலான போட்டோக்கள், வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. எனவே அவர்கள் இருவரும் சேர்ந்து செய்த சம்பவம் விரைவில் வெளிவரும் எனவும் தெரியவருகிறது.

Exit mobile version