திரும்பி வருகிறார் இயக்குநர் பேரரசு: 10 ஆண்டுகள் கழித்து அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

124994710

திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி, தர்மபுரி போன்ற வெற்றிப் படங்களை அளித்த இயக்குநர் பேரரசு, சுமார் 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டில் இவர் இயக்கத்தில் வெளியான ‘திகார்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்த நிலையில், 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்கும் பணியைத் தொடங்கவுள்ளார் பேரரசு.

அடுத்து குறைந்த பொருட்செலவில், கதைக்கு முக்கியத்துவம் கொண்ட ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு (அப்டேட்) ஜனவரி மாதத்தில் வெளியாகும் என இயக்குநர் பேரரசு சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version