சினிமாசெய்திகள்

இந்த அழுகிப் போன சமூகத்தை நினைத்தால் ரொம்ப கேவலமா இருக்கு! பிரபலங்கள் ஆவேசம்! திடுக்கிடும் காரணம் ?

Share
tamilni 96 scaled
Share

இந்த அழுகிப் போன சமூகத்தை நினைத்தால் ரொம்ப கேவலமா இருக்கு! பிரபலங்கள் ஆவேசம்! திடுக்கிடும் காரணம் ?

இந்தியாவிற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு ஜோடி ஒன்றுக்கு பீகார் இளைஞர்களால் ஏற்பட்ட விபரீத சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.

ஸ்பெயின் மற்றும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருசக்கர வாகனத்தில் ஆசியா முழுவதும் சுற்றுலாவை மேற்கொண்ட நிலையில், சமீபத்தில் அவர்கள் இந்தியா வந்துள்ளார்கள்.

கடந்த வாரம் அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்ற போது அங்கு சில மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து, அவர்களை தாக்கியதோடு அந்தப் பெண்ணையும் தவறாக பயன்படுத்தி உள்ளார்கள்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் வீடியோ வெளியிட்டு தனக்கு நடந்த சோகத்தை கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், ஏனையோரை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இந்தியர்கள் இவ்வாறு செய்துள்ளமை தொடர்பில் சர்ச்சைகள் வலுத்தது. இதையடுத்து பிரபலங்களும் குரல் கொடுக்க ஆரம்பித்து உள்ளனர்.

அதன்படி, இந்தச் சம்பவம் தொடர்பில் பிரபல நடிகை ரிச்சா சதா கூறிய போது, வெட்கக்கேடு.. இந்தியர்கள் தங்கள் வீட்டு பெண்களை நடத்துவது போல வெளிநாட்டவர்கள் நடத்தி வரும் நிலையில், ஒரு சிலரால் இந்த அழுகிப் போன சமூகத்தை நினைத்தால் அவமானமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அதேபோல துல்கர் சல்மான் இது குறித்து பேசியபோது, நீங்கள் இருவரும் எங்கள் கேரளாவுக்கு வந்த போது அங்கு உள்ள எங்கள் நண்பர்கள் உங்களுக்கு விருந்து அளித்தார்கள். ஆனால் பீகார் மாநிலத்தில் உங்களுக்கு நடந்தது போல் வேறு எங்கும் இனிமேல் நடக்கக்கூடாது என்று பதிவு செய்துள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...